நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து ஒரேநாளில் 40 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம்செய்யப்பட்டது.
முட்டை விலை ஒரேநாளில் 40 காசுகள் உயர்வு! கடந்த டிச. 07ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 15 காசுகளும், 12ஆம் தேதி 25 காசுகள் உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 40 காசுகளும் இருந்த நிலையில் இன்று (டிச. 14) மீண்டும் ஒரேநாளில் 40 காசுகள் உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம்செய்யப்பட்டது. முட்டை விலை ஒரேநாளில் 40 காசுகள் உயர்வு! கடந்த ஒரு வாரத்தில் 80 காசுகள் விலை உயர்வு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கேக் செய்யும் பணிக்கு அதிகளவு முட்டை தேவைப்பட்டதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தோடு தமிழ்நாடு, கேரளா, வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்து, தேவை ஏற்பட்ட நிலையில் விலை வேகமாக உயர்ந்துவருவதாகவும், வரும் நாள்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.