நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் ரூ.5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி ரூ.4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி ஆகும் முட்டைகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 23-ம் தேதி முதல் இன்று வரை அதாவது 8 நாட்களாக முட்டையின் விலை 5.50 காசுகளாக இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55 காசுளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நாளை முதல் அமலில் வரும். சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய் 75 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வாகும்.
ஏனெனில் கோழிப்பண்ணை வரலாற்றிலேயே முட்டை ஒன்று அதிகப்பட்சமாக கடந்த ஜூன் மாதம் ரூ.5.50 காசுகளாக இருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் முட்டையின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது 5 காசுகள் உயர்ந்து முட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், வடமாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்ததால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பொங்கல் பரிசு - திமுகவின் நிலைப்பாட்டுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்