நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26-3-19 முதல் 16-12-19 வரை பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்த மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து, புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மேகராஜ் வெளியிட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
அதன்பின் அவர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் 6,82,923 ஆண் வாக்காளர்களும், 7,14,685 பெண் வாக்காளர்களும், 122 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13,97,730 பேர் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்களைவிட 31,762 பெண் வாக்காளர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் 7,016 பேர் சேர்க்கப்பட்டு, 2,719 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு 1,621 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இருப்பு வைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: