நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) இன்று (செப்.13) நடைபெற்றது. ஆனால் நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் நேற்று (செப்.12) மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அடுத்தடுத்த இந்தத் தற்கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மாணவர் மோதிலால் குடும்பத்தினருக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் தற்கொலை முடிவுகளை எடுக்க வேண்டாம். இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை. அதைத் தான் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிலைப்பாடு. அதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்திவருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் அச்சம் காரணமாக திருச்செங்கோட்டில் மாணவர் தற்கொலை