நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாளர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர்.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை பொதுமக்களுக்கு 100 விழுக்காடு வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. உழவர் சந்தையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பரப்புரையில் நாமக்கல் உதவி ஆட்சியர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில், தனியார் கல்லூரி மாணவிகளும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். அப்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பரப்புரை செய்தனர்.