ETV Bharat / state

தங்கமணியின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - சிக்கியது முக்கிய ஆவணங்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தியதை தொடர்ந்து கரூரிலலுள்ள அவரது நண்பர் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை அலுவலர்கள் கைப்பற்றினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
author img

By

Published : Dec 15, 2021, 10:27 PM IST

நாமக்கல்: அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான தங்கமணியின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் காலை 6.30 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செந்தில், குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஈவிகேஎஸ் என்கிற சுப்ரமணியம், உறவினர் சிவா மற்றும் அவரது ஆதரவாளரான சேகர் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடைபெற்றன.

அதேபோல் நாமக்கல்லில் அவருக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்கள் சத்தியமூர்த்தி இல்லம், அலுவலகம் மற்றும் நல்லிபாளையத்திலுள்ள தென்னரசுவின் அலுவலகலம், பெரியப்பட்டியில் உள்ள கோழி மருந்து விநியோகஸ்தர் ஸ்ரீதேவி இல்லம், பரமத்தி வேலூர் அடுத்த வெங்கரையில் அதிமுக இக்கிய அணியை சேர்ந்த விஜி, மணல் ஒப்பந்ததாரர் பொன்னர் சங்கருக்கு சொந்தமான இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தங்கமணிக்கு நெருக்கமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெற்றது. நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் முன்னால் அமைச்சர் தங்கமணி மீதும் அவரது மனைவி சாந்தி மற்றும் அவரது மகன் தரணிதரன் மீது முதல் தகவல் அறிக்கையை முன்னதாகவே பதிவு செய்து இந்த சோதனையை நடத்தினர்.

நடந்து முடிந்த 2016, 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்துக்கள் தவீர வருமானத்தை விட 4.85 கோடி ரூபாய் மதிப்பிளான சொத்தக்களை தங்கமணியும் அவரது குடுப்பத்தாரும் சேர்த்துளாதாகவும், முறைகேடாக சேர்க்கப்பட்ட பணத்தை கிரிப்டோ கர்ண்சி மூலம் மாற்றியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

கரூர்: இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய நண்பரான சிங்கப்பூர் தொழிலாதிபர் வேலுச்சாமியின் உடன்பிறந்த சகோதரி வசந்தி என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவர், தனது கணவரை இழந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் மூலம் பணப்பரிவர்த்தனை, பண பதுக்கல் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பின்னர், சோதனை நிறைவு பெற்றதும் அங்கிருந்து கைப்பற்றிய முக்கிய ஆவணங்களுடன் நாமக்கல் நோக்கிச் சென்றனர். இந்த சோதனை தமிழ்நாடு, பிற மாநிலங்களில் இச்சோதனை நடைபெற்றதால் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கணக்கில் வராத ரொக்கப்பணம் குறித்து தெரிவிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.