ETV Bharat / state

வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை வைத்து மோடி அரசியல் செய்வது அநாகரிகம்: திண்டுக்கல் ஐ. லியோனி சாடல்...!

நாமக்கல்: நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை வைத்து மோடி அரசியல் செய்வது அநாகரிகம் என பட்டிமன்றப் பேச்சாளரும் திமுக நட்சத்திரப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி சாடியுள்ளார்.

திண்டுக்கல் லியோனி
author img

By

Published : Apr 10, 2019, 8:39 AM IST

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து திண்டுக்கல் ஐ. லியோனி ரப்புரை செய்தார். அப்போது, ஆளும் பாஜக அரசு எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பத்தி ஐந்து வீரர்களின் பெயரை வைத்துக்கொண்டு பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. இது அநாகரிகமான செயல் என விமர்சித்தார்.

தாங்கள் அமைத்துள்ள கூட்டணி மிகவும் சிறப்பான கூட்டணி; இதில் பூ, இலை, பழம் என அமைந்துள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் கூறியுள்ளார். ஆனால் சூரியன் இல்லாவிடில் அவையனைத்துமே வீணாகிப் போய்விடும் என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசினார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் தான் உழைத்து முன்புக்கு வந்தவன் என கூறிவருகிறார். உழைப்பு என்றால் என்ன என்பதே முதலமைச்சருக்கு தெரியவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினிடம்தான் உழைப்பைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். தினந்தோறும் பல்வேறு மக்களோடு மக்களாக நின்று பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார். இதுபோன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் செய்யமுடியுமா எனக்கேள்வி எழுப்பினார்.

Intro:நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களை வைத்து வாக்குசேகரிப்பில் மோடி அநாகரிகமான அரசியல் செய்கிறார்- திண்டுக்கல் லியோனி

Body:
நாமக்கல்லில் மக்களவை தேர்தலுக்கு திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். நாமக்கல் பூங்கா சாலையில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் பொதுமக்களிடையே வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அப்போது பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி ஆளும் பாஜக அரசு எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பத்தி ஐந்து வீரர்களின் பெயரை வைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டன.இது அநாகரிகமாக செயல் என குற்றம்சாட்டினார். பாஜக மாநில தலைவர் தாங்கள் அமைத்துள்ள கூட்டணி மிகவும் சிறப்பான கூட்டணியாக உள்ளது.இதில் பூ,இலை,பழம்,மத்தளம் என அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் சூரியன் இல்லாவிடில் இவையனைத்துமே வீணாகி போய்விடும் என அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் மக்களிடையே எடுத்துரைத்தார். தமிழக முதல்வர் எதற்கெடுத்தாலும் நான் உழைத்து முன்புக்கு வந்தவன் என கூறிவருகிறார்.உழைப்பு என்பதே முதலமைச்சருக்கு தெரிய வில்லை. திமுக தலைவர் ஸ்டாலினிடம் தான் உழைப்பைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். தினந்தோறும் பல்வேறு மக்களை மக்காளாக மக்களாய் நின்று பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார்.இதுபோன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் செய்யமுடியுமா எனக்கேள்வி எழுப்பினார். எட்டு வழி சாலை திட்டத்தை நீதிமன்றம் தடைசெய்யப்பட்டது வரவேற்க வேண்டிய செயலாகும் என பெருமிதம் கொணாடார். மக்களை மோடி அரசு ஏமாற்றி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்து பொதுமக்களுக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. கல்வி கடன், விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு ஊக்கத்தொகை இவையனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையாகும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Conclusion:இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.