ETV Bharat / state

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்!

Sanitation workers protest in Namakkal: நாமக்கல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 50க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Sanitation Workers
தூய்மை பணியாளர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 12:19 PM IST

தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மோகனூர் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சுமார் 200 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகள், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு, செவிலியர், மருத்துவர்களுக்கு உதவியாளர் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர்கள் பணியமர்த்தபட்டனர். இந்த நிறுவனம் இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 650 சம்பளமாக அளிக்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு தங்களுக்கு 350 ரூபாய் மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதனை முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், பணியாளர்களுக்கு உடை மாற்றும் அறை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க: Pragyan rover: நிலவில் என்ன செய்யப் போகிறது ரோவர் - 14 நாட்கள் இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள்!

மேலும், பெண்களை பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. தாங்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக பணி செய்வதாகவும், அதற்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் நடத்தினர். இதனால் மருத்துவமனையில் தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல், நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: ‘தேவையில்லாத விஷயங்களில் தலையிடும் இந்து சமய அறநிலையத்துறை’ - பாரத இந்து மகா சபா எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.