ETV Bharat / state

பருத்தி விலை கடும் வீழ்ச்சி -  விவசாயிகள் வேதனை ! - விலை வீழ்ச்சி

நாமக்கல் : பருத்தி விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.

பருத்தி விலை கடும் வீழ்ச்சி
author img

By

Published : May 17, 2019, 7:42 AM IST

நாமக்கலில் வாரந்தோறும் வியாழக்கிழமை நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை நாமக்கல் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஏலம்விடுவது வழக்கம். கடந்த வாரங்களில் பருத்தியானது கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பருத்தியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி கிலோ 61 ரூபாய் வரையிலும் ஏலம் விடப்பட்டது.

நாமக்கல்லில் பருத்தி விலை கடும்வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை
இந்த விலை வீழ்ச்சியால் பருத்தி பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், போதிய நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துவிட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் ஏலம் விடப்படும் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஏலம் கேட்கும் ஒரு சில விவசாயிகள் அணிகளாக பிரிந்து அவர்களே விலை நிர்ணயம் செய்துவருவதாகவும் இதனால் பருத்திக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பலர் விவசாயம் செய்யும் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கு குறிப்பாக கூலி வேலைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.மேலும், தற்போது சில நாட்களாக நாமக்கல்லில் மழை பெய்து வருவதால் வரும் வாரங்களில் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Intro:நாமக்கல்லில் பருத்தி விலை கடும்வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை !

Body:நாமக்கல்லில் இன்று பருத்தி ஏலம் விடப்பட்டது. வாரந்தோறும் வியாழக்கிழமை நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை நாமக்கல் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஏலம் விடப்படும்.

கடந்த வாரங்களில் பருத்தியானது கிலோ 65 ரூபாய்க்கு விற்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைப்பெற்ற ஏலத்தில் பருத்தியின் விலை கடும் வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இன்று கிலோ 61 ரூபாய் வரையிலும் ஏலம் விடப்பட்டது.

இந்த விலை வீழ்ச்சிக்கு பருத்தி பயிரிடம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், போதிய நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துவிட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும் ஏலம் விடப்படும் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஏலம் கேட்கும் ஒரு சில விவசாயிகள் அணிகளாக பிரிந்து அவர்களே விலை நிர்ணயம் செய்துவருவதாகவும் இதனால் பருத்திக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பலர் விவசாயம் செய்யும் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கும் குறிப்பாக கூலி வேலைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.

தற்போது சில நாட்களாக நாமக்கல்லில் மழை பெய்து வருவதால் வரும் வாரங்களில் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.