நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மண்டல சிறப்பு குழு அலுவலர்களான ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் முனியநாதன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மளிகை, காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மெகராஜ், “மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டத்தில் நோய் தொற்று அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மாவட்டத்திலிருந்து தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்குச் சென்று வந்த 28 நபர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 124 பேரும், அவர்களது உறவினர்கள், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 159 பேரும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சையின் 14ஆம் நாள் அவருக்கு பரிசோதனை செய்யப்படும். அதில் அவருக்கு தொற்று இல்லை என உறுதியானாலுமம் அவர்கள் தொடர்ந்து 14 நாள்கள் கண்காணிப்பிலேயே இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகத்தை பார்வையிட்ட அமைச்ச
ர்