ETV Bharat / state

பேனர்களை உடனே அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்! - தேர்தல் தேதி அறிவிப்பு

நாமக்கல்: அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை உடனே அகற்ற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

election
election
author img

By

Published : Feb 27, 2021, 10:13 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய ஆட்சியர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் (பிப்.26) தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளன. அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் உள்ள சிலைகள், கொடிக்கம்பங்கள், போஸ்டர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்களை அடுத்த 24 மணிநேரத்திலும் சுவர் விளம்பரங்கள் அடுத்த 48 மணி நேரத்திலும் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அலுவலர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி சிபிஎம் நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.