நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி ரோஜாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. அவரது மகள் பிரியங்கா நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்றார். இந்நிலையில் கல்லூரிக்குச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்த பிரியங்கா அப்பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அவரது காதலர் கோகுலிடம் பேசி கொண்டிருந்தவர், திடீரென கிணற்றில் குதித்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும், நாமக்கல் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புத்துறையினர், மீட்பு படை வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாணவி பிரியங்காவின் உடலை ஒரு மணி நேரப் போரட்டத்திற்கு பிறகு மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் மாணவி பிரியங்கா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நாமக்கல் காவல் துறையினர், மாணவி பிரியங்காவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துனர். பின்னர் பிரியங்காவின் காதலர் கோகுலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னையில் மனைவியின் சமாதியில் விஷம் அருந்தி கணவன் தற்கொலை