நாமக்கல் மாவட்டம் பில்லிகல்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் தங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை அவரது வீட்டின் அருகில் வசிக்கும் நபர் ஆக்கிரமித்துள்ளார். இதுகுறித்து பலமுறை மாவட்ட அலுவலர்கள், காவல் துறையினரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் மண்ணெண்ணெய் ஊற்றியதைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அடுத்த பவித்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்காந்த். இவர் அடமானம் வைத்த தனது வீட்டை மீட்டு தரக் கோரி தனது மனைவி, குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவர்களையும் காவல் துறையினர் மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலையம் முன்பு தற்கொலை முயற்சி: நபருக்கு தீவிர சிகிச்சை