தமிழ்நாடு அரசு தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கரோனா நிதி நெருக்கடியால், போனஸ் குறைத்து வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரோனா பொது முடக்கத்திலும் பணியாற்றிய தங்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கக்கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நாமக்கல் கிடங்கில் பணியாற்றிவரும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 20 விழுக்காடு போனஸ் வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கரோனா காலத்திலும் விடுப்பு இல்லாமல் நிர்வாகத்துக்காகப் பணியாற்றி எங்களுக்கு 10 விழுக்காடு போனஸிக்கு பதிலாக 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிடங்கின் நுழைவாயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.