ETV Bharat / state

ராசிபுரம் குழந்தைக் கடத்தல் வழக்கில் மேலும் 4 பேருக்கு ஜாமீன்! - bail

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் நான்கு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமின் வாங்கிய நால்வர்
author img

By

Published : Aug 1, 2019, 10:30 PM IST

நாமக்கல், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், கடத்தலில் ஈடுபட்ட விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் ரவிச்சந்திரனையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், குழந்தைகள் விற்பனை செய்வதற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோரை கைதுசெய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி, இதுதொடர்பாக சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூரை சேர்ந்த ரேகா, அமுதாவின் கார் ஓட்டுநர் நந்தக்குமார் மற்றும் கொல்லிமலையை சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோரை கைது செய்தனர்.

ஜாமின் வாங்கிய நால்வர்
ஜாமீன் வாங்கிய நால்வர்

மேலும், விசாரணையில் கைதானவர்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், கைதானவர்கள் ஐந்து முறை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்திலும், மூன்று முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆன நிலையிலும் சிபிசிஐடி-யினர் குற்றப்பத்திரிகையை மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி லதா, இடைத்தரகர்கள் அருள்சாமி, செல்வி, ஹசீனா, பர்வீன் ஆகியோரை தினந்தோறும் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் நான்கு பேருக்கு நிபந்தனையுடன் ஜாமின்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ரவிச்சந்திரன் என்பவரையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டன.பின்னர் விசாரணை மேற்கொண்டதில் சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூரை சேர்ந்த ரேகா, அமுதாவின் கார் ஓட்டுநர் நந்தக்குமார், மற்றும் கொல்லிமலையை சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோரையும் கைது செய்தனர்.மேலும்  விசாரணையில் கைதானவர்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் இதுவரை 12 பேர் கைது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கைதானவர்கள் ஐந்து முறையும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்திலும் மூன்று முறையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு நிலையில் அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆன நிலையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இன்று நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வாதிட்டனர். விசாரணை மேற்கொண்ட நீதிபதி லதா  இடைத்தரகர்கள் அருள்சாமி, செல்வி, ஹசீனா, பர்வீன் ஆகியோர் தினந்தோறும் சேலம் சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

இவ்வழக்கில் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா உட்பட இதுவரை எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.