ETV Bharat / state

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி - ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு - நாமக்கல்

நாமக்கல்: சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி
author img

By

Published : Jun 12, 2019, 5:44 PM IST

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் நாமக்கல்லில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசியா மரியம் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்
பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்

மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியின் போது "குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்" "குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தியபடி சென்றனர்.

கையெழுத்து இயக்கம்
கையெழுத்து இயக்கம்

பேரணிக்கு முன்பு தொழிலாளர்துறை சார்பில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு முறை குறித்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் கையொப்பமிட்டனர்.

Intro:சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரணி

Body:சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆசியா மரியம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இதில் "குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்" "குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தியபடி சென்றனர். இந்த பேரணியானது நாமக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 18 வயதுக்குட்பட்ட இளம் சிறுவர்களையும் பணிக்கு அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு குழந்தைகள் மற்றும் வளரும் இளம் சிறார்கள் தொழிலாளர் முறை சட்டத்தின் கீழ் 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதி ஏற்போம் என மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் தொழிலாளர்கள் ஒழிப்பு முறை குறித்த கையெழுத்து இயக்கம் தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் கல்லூரி மாணவர்கள் கையொப்பமிட்டனர்.

இந்த நிகழ்ச்சியை நாமக்கல் சார் ஆட்சியாளர் கிரந்திகுமார் பதி, வட்டாட்சியர் சுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணையர் மாதேஸ்வரன், துணை ஆய்வாளர் திருஞானசம்பந்தம், சார்நிலை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.