நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எட்டிமடை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், கேபிள் டிவி ஆபரேட்டராகவும், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களையும் செய்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேவனாங்குறிச்சி பகுதியில் நிலத்தகராறில் நடந்த கொலை வழக்கில், இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த (மே.7) ஆம் தேதி முருகன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து திருச்செங்கோடு நகர காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசராணையில், பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகராறில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் எட்டு பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரெம்டெசிவர் மருந்தை கள்ளத்தனமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்!