நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரோசி, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களின் மூத்தமகன் ஷ்யாம் எட்வின்(16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், ஷ்யாம் இன்று (நவம்பர் 8) நண்பர்களுடன் காக்காவேரி அருகே உள்ள குட்டையில் விளையாட சென்றார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். மகன் உயிரிழந்துவிட்டதாக வந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தாயார் ரோசி, மகன் இறக்கவில்லை எனக்கூறி முதலுதவி சிகிச்சை அளித்தார்.
அதைத்தொடர்ந்து, நீரில் மூழ்கிய ஷ்யாமை ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நாமகிரிபேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் டாடா சுமோ கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு!