நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மேற்கு சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. கூலித் தொழிலாளியான இவரது மகன் அரவிந்த். இவர் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று விடுமுறையையொட்டி மாணவன் அரவிந்த் நண்பர்களுடன் பச்சுடையாம்பட்டி பகுதியிலுள்ள கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றுள்ளார். குளிக்கச் சென்ற மாணவன் அரவிந்த் வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர், உறவினர்கள் மாணவனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று கல்குவாரி பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மாணவன் அரவிந்த் கல்குவாரி குட்டையில் சடலமாக மிதப்பதை பெற்றோர்களுக்குத் தெரிவித்தனர். இதனையடுத்து நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: