ETV Bharat / state

'வேல் கொண்டு போலி நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்’ - எல்.முருகன்

author img

By

Published : Jan 25, 2021, 12:11 AM IST

நாமக்கல்: திமுக தலைவர் ஸ்டாலின் வேல் கொண்டு போலி நாடகத்தை நடத்தி வருகிறார்; ஓட்டுக்காக இரட்டை வேடம் போடுகிறார் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

L Murugan
எல்.முருகன்

நாமக்கல் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், அக்கட்சியின் அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் மாநாடு இன்று நடைபெற்றது. பாஜகவின் நாமக்கல் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் பாஜகவின் மாநில தலைவர் டாக்டர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’காங்கிரஸ்-திமுக கூட்டணி தான் தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் தமிழர்களையும் கொன்று குவித்தது. இதற்கு மாறாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்களை நினைவு கூர்ந்து வருகிறார். திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். எங்கு பேசினாலும் திருக்குறளை முன்னுதாரணமாக கூறிவருகிறார்.

தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பற்றி பேசுவதற்கு ராகுல் காந்திக்கு எவ்வித அருகதையும் கிடையாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி. அதில் பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்’ என்றார்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல் நடத்துவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ’2014ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மீனவர்கள் மீது ஒரு தாக்குதல் நடத்தப்படவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இலங்கையிலுள்ள இந்திய தூதரை மத்திய அரசு கூப்பிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இனி இது போன்று நடக்கக்கூடாது என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’என்றார்.

திருத்தணியில் மு.க. ஸ்டாலினிடம் வேல் வழங்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், ’ஸ்டாலின் கையில் வேல் வழங்கியது, பாஜக நடத்திய வேல் யாத்திரைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. பாரதிய ஜனதா கட்சிக்கு இன்று தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். இதனால் மு.க. ஸ்டாலின் தானும் வேலெடுத்து ஒரு போலியான நாடகத்தை நடத்தி வருகிறார். இது எல்லோருக்கும் தெரியும்.

இந்து மத வழிபாடுகளை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஓட்டுக்காக இரட்டை வேடம் போடுகிறார். வேலேந்தியதும் அதுபோலத்தான். ஒருவேளை ஸ்டாலின் திருந்தியிருந்தால் நன்றி’ என்றார்.

சொந்த ஊரில் சாமி தரிசனம்

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் எல்.முருகன் இன்று (ஜன.24) அவரது சொந்த கிராமமான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் உள்ள கோனூருக்கு வருகை புரிந்தார். அவருக்கு அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். முன்னதாக புதுப்பாளையம் பகுதியில் உள்ள அவரது குலதெய்வ கோயிலான ஸ்ரீ நந்தகோபால பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படிங்க:தமிழ் கலாசாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.