கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோழி, வாத்துப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பதை அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 20 ஆயிரம் கோழிகள், வாத்துகளை அழிக்க கேரளா மாநில கால்நடை பராமரிப்புத் துறை உத்தரவிட்டது.
இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்களை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளிமாநிலங்களில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு நுழைவாயில் அருகே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் நோய்த் தடுப்பு மருந்துகளும் தெளிக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவிற்கு முட்டை, கோழிகளை கொண்டு சென்று விட்டு திரும்ப வரும் வாகனங்களை பண்ணையாளர்கள் தீவிர சோதனை செய்த பிறகே, பண்ணைகளுக்குள் அனுப்புகின்றனர்.
இதையும் படிங்க: கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும்: வதந்தியை கிளப்பியவர் கைது!