நாமக்கல் மாவட்டம், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில். இவர் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலின் அருகே உள்ள தனியார் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று(டிச.31) மாலை கடையின் எதிரே உள்ள பகுதியில், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுக் கடையில் பணியாற்றிய செந்தில், பணி முடிந்து வீடு திரும்ப வெளியே வந்து பார்த்தபோது, தனது இருசக்கர வாகனம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து செந்தில் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அவ்வழியாக வந்த ஒருவர், இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் செல்வது தெரியவந்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிகவும் கூட்ட நெரிசல் கொண்ட இந்தச் சாலையில் அடிக்கடி இதுபோன்று வாகனத் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் அதற்கு ஒத்துவர மாட்டார் - செல்லூர் ராஜு