நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (68). இவர் சேலம் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று(அக்.8) கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, புஷ்பராஜ் ஊரிலிருந்து 60 ஆயிரம் ரூபாயை தனது இருச்சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு நிதி நிறுவனத்திற்கு வந்துள்ளார்.
நிதி நிறுவனத்தில் விடுமுறை சொல்லிவிட்டு நேதாஜி சிலை அருகே உள்ள மெடிக்கலில் மருந்து வாங்கியுள்ளார். பின்னர் புஷ்பராஜ் இருசசக்கர வாகனத்தில் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த ரொக்கப்பணம் 60 ஆயிரம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் மெடிக்கல் கடையில் விசாரித்துள்ளார். பிறகு இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் காவல் துரையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: