கர்வாரா: கர்நாடக மாநில கர்வாரா பகுதியில் உள்ள ஷிரூர் கிராமத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவின் போது மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகாவை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை பெரும் சேதமடைந்தது. இந்த நிலச்சரிவின் போது நான்கு வீடுகள், இரண்டு உயர் அழுத்த மின் ஒலிபரப்புக் கோபுரங்கள், ஒரு டீ கடை உள்ளிட்டவைகள் இடிந்து சேதமடைந்தன.
நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். கங்காவலி ஆற்றில் பலரும் அடித்துச் செல்லப்பட்டனர். நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப்பகுதியிலிருந்து பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த ஓட்டுநர் அர்ஜூன் என்பவர் லாரியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், காணாமல் போன உள்ளூரை சேர்ந்த ஜெகநாத் நைகா, லோகேஷ் நைகா ஆகியோரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்