ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள் - ஆட்சியர் ஆய்வு!

நாமக்கல்: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Collector
Collector
author img

By

Published : Dec 14, 2019, 8:12 AM IST

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27, 30 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வாக்குகள் எண்ணப்படும் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரி வாக்கு மையத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆட்சியர் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுடன் சென்ற அவர், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி வார்டு வாக்குகள், ஊராட்சி ஒன்றிய வார்டு வாக்குகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உள்ளிட்டவைகளின் வாக்குகள் எண்ணும் அறைகளை பார்வையிட்டார். அங்கு, அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குசாவடி அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் எந்தெந்த வழியில் அனுமதிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செயப்பட்டன.

இதையும் படிங்க: சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்!

Intro:வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தர வேண்டும் நாமக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுரைBody:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 25 சிற்றூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ண நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி வார்டு வாக்குகள் எண்ணும் அறை, ஊராட்சி ஒன்றிய வார்டு வாக்குகள் எண்ணும் அறை, கிராம ஊராட்சி தலைவர் வாக்குகள் எண்ணும் அறை, கிராம ஊராட்சி வார்டு வாக்குகள் எண்ணும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தனர். மேலும் கல்லூரி வளாகத்தில் குடிநீர், கழிப்பிட வசதிகள் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குசாவடி அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் எந்தெந்த வழியில் அனுமதிப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.