ETV Bharat / state

குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க நாகையில் விழிப்புணர்வு முகாம்!

நாகை: வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக நாகப்பட்டினத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு முகாம்
author img

By

Published : May 29, 2019, 2:19 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும், தீவிர வயிற்றுப்போக்கு தடுப்புக்கான இரு வார விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர் "குழந்தைகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விழிப்புணர்வு பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் வாயிலாக பெற்றோருக்கு சில புரிதல்கள் ஏற்படும்" என தெரிவித்தார்.

விழிப்புணர்வு முகாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும், தீவிர வயிற்றுப்போக்கு தடுப்புக்கான இரு வார விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர் "குழந்தைகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விழிப்புணர்வு பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் வாயிலாக பெற்றோருக்கு சில புரிதல்கள் ஏற்படும்" என தெரிவித்தார்.

விழிப்புணர்வு முகாம்
Intro:வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க  விழிப்புணர்வு முகாம்.


Body:வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க  விழிப்புணர்வு முகாம்.


பொது சுகாதாரத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும்,  தீவிர வயிற்றுப்போக்கு தடுப்புக்கான இரு வார விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நாகை மாவட்டம், தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், குழந்தைகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் வாயிலாக  பெற்றோருக்கு சில புரிதல்களை ஏற்படுத்தி வருவதாகவும், தமிழகத்தில் தீவிர வயிற்றுப்போக்கால் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிப்பதாகும், இதனை தடுக்க  ஆண்டுதோறும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் இரண்டு வார காலம் தமிழக அரசால் நடத்தப்படுகின்றது என்றும்,  இந்தாண்ட்டு விழிப்புணர்வு முகாம்கள் மே 28 தொடங்கி  ஜூன் 8  வரை  நடைபெற உள்ளதாகவும் முகாம்களானது, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், அரசுப் பள்ளிகள் என பல்வேறு இடங்களில் நடைபெறும் என்றும்,

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஓஆர்எஸ்  எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் ஜின்க் மாத்திரையை, 14 நாட்கள் கொடுக்க வேண்டும் என்றும்  இதுகுறித்த தகவல்களை மக்களிடையே தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து   விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள  அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.