நாமக்கல் அடுத்த தூசூர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் நாமக்கல் துணிக் கடையில் வேலை செய்துவருகிறார். தன்னை கடத்திச்செல்ல 3 இளைஞர்கள் பின் தொடர்வதாக அப்பெண் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
ஆட்டோவை அப்பெண்ணின் உறவினர்கள் பின்தொடர்ந்து அதனை மடக்கி பிடித்தபோது ஆட்டோ ஓட்டுநரான சேலத்தை சேர்ந்த குமார் என்பவர் பொதுமக்களிடம் சிக்கி கொண்டார். அப்போது அங்கிருந்தவர்கள் பெண்ணை கடத்த வந்ததாக கூறி இளம்பெண்ணின் உறவினர்கள் ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல்துறையினர், காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியை சேர்ந்த பூவரசன், செந்தில் ஆகியோருக்கு வாடகைக்கு ஆட்டோவை எடுத்து வந்ததாகவும், தனக்கு பெண் கடத்தல் குறித்து எதுவும் தெரியாது என கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தப்பி ஓடிய மற்ற இரு நபர்களையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர். நகரின் முக்கிய சாலையில் இளம்பெண்ணை கடத்துவதாக வந்த தகவலின் பேரில் ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பழுதான வாகனத்தை கொடுத்து விவசாயி ஏமாற்றம் - உறவினர்கள் சாலை மறியல்!