நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஒற்றை கல்லால் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கோபுரங்கள் இல்லாமல் திறந்த வெளியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது. இக்கோயிலில் ஆஞ்சநேயர் சிலைக்கு தினசரி பல்வேறு நறுமண பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று முதன் முறையாக ஆஞ்சநேயர் சிலைக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு உகந்த தினமான சனிக்கிழமையை ஒட்டி நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.