தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைப்பெற்றது. அதன்படி, நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் 44 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன.
அதைத்தொடர்ந்து இன்று(மார்ச்.20) மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தேர்தல் அலுவலர் கோட்டைக்குமார், மனுக்களை பரிசீலனை செய்தார். அதில் அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர், திமுக வேட்பாளர் ராமலிங்கம், தேமுதிக வேட்பாளர் செல்வி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் பாஸ்கர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆதம் பாரூக் உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதற்கிடையில், வேட்புமனு பரிசீலனைக்கு வந்த அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனர் ரமேஷ் என்பவர் காந்தி வேடமிட்டு தனது சின்னமான 'கிரிக்கெட் பேட்ஸ்மேன்' போல் ஹெல்மெட், கையுறைகள் அணிந்து பேட்டுடன் அலுவலகம் வந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவருடைய கிரிக்கெட் பேட்டை பறிமுதல் செய்தப் பின் வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்க அனுமதித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 217.35 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் - சத்யபிரத சாகு