நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுசத்திரம் அரசுப் பள்ளியில் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மூன்று மாணவர்கள் நடனமாடி அநாகரிகமாக நடந்துகொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான நிலையில், அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாணவர்களின் ஒழுங்கீனமான செயல்கள் காணொலியாக வெளிவந்ததால், இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த தலைமை ஆசிரியர் குணசேகரன், ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட மூன்று மாணவர்களைப் பள்ளியிலிருந்து நீக்கியதோடு மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து டிசியை (மாற்றுச் சான்றிதழை) வழங்கினார்.
இதையும் படிங்க:கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!