நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த கந்தம்பாளையம் அருகேயுள்ள கூடச்சேரி மேலப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (21). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சந்தோஷ்குமார் கடந்த ஒரு வருடமாக அதேப் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியான சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த சிறுமியின் தாயார் அச்சிறுமியைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜன.,30ஆம் தேதி சந்தோஷ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் சிறுமியின் தாயார் நல்லூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சந்தோஷ்குமாரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று (பிப்.03) சந்தோஷ்குமார் இருச்சக்கர வாகனத்தில் திருச்செங்கோடு - பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை மடக்கி பிடித்து நல்லூர் காவல் துறையினர், மாணவியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, சந்தோஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!