ETV Bharat / state

மூவாயிரம் பேருக்கு சுட சுட உணவு வழங்கும் தன்னார்வலர்கள் - இவர்களை ஊக்குவிக்குமா அரசு?

நாமக்கல்: ஊரடங்கு காலத்தில் ஏழை, எளியவர்களுக்கு மூன்று வேளை உணவளிக்கும் தன்னார்வலர்கள், தினசரி மூன்றாயிரம் பேருக்கு சுட சுட உணவு தயாரித்து விநியோகித்து வருவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

community kitchen in Namakkal district
community kitchen in Namakkal district
author img

By

Published : Apr 13, 2020, 12:31 PM IST

Updated : Jun 2, 2020, 4:59 PM IST

கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடியும் தருவாயில் உள்ள நிலையில், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வந்துச் செல்கின்றனர். இருப்பினும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் போதிய வருமானமின்றி பசி வறுமையில் வாடி வருகின்றனர்.

அன்றாட வேலையை நம்பி வாழ்ந்து வரும் மக்கள், அடுத்த வேளை உணவிற்கே என்ன செய்வது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கதியாய் நிற்கின்னறனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் அதனை நம்பி ஏராளமான தொழிலாளிகளும் உள்ளனர். தமிழ்நாடு அரசின் ஊரடங்கால் விசைத்தறிகள் செயல்படாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கு கூட போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

பசியில் வாடும் மக்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

அவர்களுக்கு குமாரபாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தனியார் திருமண மண்டபத்தில் தினசரி மூன்று வேளையும் உணவளித்து வருகின்றனர். ஏழை, எளியோர், முதியவர், வெளிமாநிலத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மூவாயிரம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தினசரி உணவு வழங்கும் மனிதம் போற்றும் பணியை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவால் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இணைந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தினசரி உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். ஒருநாள் உணவு தயாரிப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இதற்காக வாட்ஸ் அப் மூலம் குழு ஒன்று தொடங்கி, அதன்மூலம் நிதி திரட்டியும், தங்களது சொந்த பணத்தையும் கொண்டு வறுமையில் வாடும் மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம்.

மூவாயிரம் பேருக்கு சுட சுட உணவு வழங்கும் தன்னார்வலர்கள்

சரியான நேரத்தில் உணவை தயாரித்து, உணவிற்காக ஏங்குபவர்களின் பசியைப் போக்க முயற்சித்து வருகிறோம்" என்று மகிழ்வுடன் தெரிவித்தனர். தற்போதைய சூழலில், கரோனா நோய்த் தொற்றை விட ஏழைகள் பசி மற்றும் வறுமையின் பிடியால் இறந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற தன்னார்வலர்களை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு: உணவின்றி பட்டினியால் முதியவர் உயிரிழப்பு?

Last Updated : Jun 2, 2020, 4:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.