நாமக்கல் அடுத்த சிவியாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள், மனைவி பாப்பாத்தி 7 குழந்தைகள் என மொத்தம் 9 பேர். 19 ஆண்டுகளாக என். புதுப்பட்டியில் உள்ள பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான ஆர்.பி.எஸ். கோழிப்பண்ணையில் பணியாற்றி-வந்தனர்.இந்நிலையில், பெருமாள், கோழிப்பண்ணை உரிமையாளரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதில் 30 ஆயிரம் ரூபாயை மட்டும் திருப்பி செலுத்தியுள்ளார். மீதமுள்ள அசல் தொகை, வட்டியை செலுத்த முடியாமல் பெருமாள் தவித்திருக்கிறார். இதனால், பண்ணையார் பொன்னுசாமி, பெருமாள் மற்றும் குடும்பத்தினரை சில மாதமாக முறையான ஊதியம் வழங்காமால் கொத்தடிமையாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த பெருமாள், இது குறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் மு. ஆசியாமரியம் உத்தரவின் பெயரில், வருவாய்த்துறையினர், கோழிப் பண்ணைக்கு சென்று அங்கிருந்த பெருமாள், அவரது மனைவி பாப்பாத்தி, குழந்தைகள் உட்பட 9 பேரை மீட்டனர். மீட்கபட்ட அனைவரும், துணை ஆட்சியர் கிராந்திகுமாரிடம் ஒப்படைக்கபட்டனர்.பண்ணை உரிமையாளர் கொத்தடிமையாக நடத்தினாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று-வருகிறது.