நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் வீடுகளில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளரின் சிறப்புக் குழுவினர் மற்றும் நாமக்கல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவல் துறையினர் மேட்டுத்தெரு பகுதியில் நேற்று (ஜூலை 17) திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மேட்டுத்தெரு, மாரி கங்காணி தெரு பகுதிகளில் கஞ்சாவை பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்து வந்த புவனேஸ்வரி என்பவரையும், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 9.5 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள கஞ்சா வியாபாரிகள் மூன்று பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மல்லிகைப்பூ தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!