ETV Bharat / state

நாமக்கல்லில் 87% கிசான் முறைகேடு பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது - ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடியில் இதுவரை 87 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கூறியுள்ளார்.

87% Kisan abuse money withdrawn in Namakkal said district Collector

author img

By

Published : Oct 19, 2020, 2:39 PM IST

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிசான் மோசடி தொடர்பாக 87 விழுக்காடு பணம் திரும்ப வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 விழுக்காடும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வசூல் செய்யப்படும். இதுவரை 83 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

கிசான் முறைகேடு தொடர்பாக வேளாண்மை அலுவலகக் கண்காணிப்பாளர்கள் வட்டார அளவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பண்டிகைகள், குளிர் காலங்கள் வரவுள்ளதையடுத்து, கரோனா பரவலைத் தடுக்க மக்கள் தகுந்த இடைவெளி, முகக் கவசங்களைப் பயன்படுத்தவேண்டும்” எனக் கூறினார்.

.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.