நாமக்கல் திருச்சி சாலை இந்திரா நகரில் வசித்து வரும் பொற்கோ என்பவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிலிருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர்.
இதேபோல் ரெட்டிபட்டி, நாமக்கல் முருகன் கோயில் பகுதியில் உள்ள வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து நாமக்கல் காவல்துறையினர் குற்றவாளிகளை தனிப்பட்டை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (பிப்.13) மோகனூர் சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற ஆறு பேரை காவல்துறையினர் விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் ஆறு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் நாமக்கல்லை சேர்ந்த அமுதா, வெங்கடேசன், மோகனூரை சேர்ந்த வெங்கடாசலம், சரண்குமார், பரமத்தியை சேர்ந்த விக்னேஷ், விருத்தாசலத்தை சேர்ந்த கணேசன் என்பதும், இவர்கள் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை அமுதா நோட்டமிட்டு வந்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிப்பதன் அடிப்படையில் இரவில் கொள்ளையடிப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்த 13 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரோனா பரிசோதனை செய்து அதன் பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் - மடக்கி பிடித்த காவல்துறையினர்!