நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாச்சலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வந்தது.
அதில் எதிர்பாராத விதமாக நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதிலிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் எரிந்து நாசமாகின. அதையடுத்து அங்கு விரைந்த புதுசத்திரம் காவல் துறையினர் தீ விபத்து குறித்து அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடுவதற்காக வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது, தீப்பிடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: துணிக்கடையில் தீ விபத்து: ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!