நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதான ஏகலைவா கலைக்கூடத்தில் சிலம்பம் பயிற்சிபெற்ற பிரார்த்தனா (8), அக்ஷயா ஸ்ரீ (9) ஆகிய இரு மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனைகளை நிகழ்த்தினர்.
இதில் மாணவி பிரார்த்தனா (8) ஒரு நிமிடத்தில் 43 முறை நான்கடி சுவடு (four step) எடுத்து சாதனை படைத்தார். இதேபோல மற்றொரு மாணவியான அக்ஷயா ஸ்ரீ (9) சிலம்பம் சுற்றியவாறு 20 கிலோமீட்டர் தொடர்ந்து நடந்துசென்று சாதனைபுரிந்தார்.
சாதனைபுரிந்த இரு மாணவிகளையும் பாராட்டி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் ஜெயப்பிரதாப், கெளதம் ஆகியோர் மாணவிகளுக்கு நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ், பதக்கங்களை வழங்கி பாரட்டினர்.
முன்னதாக இந்தச் சாதனை நிகழ்வினை நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வேல், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏகலைவா கலைக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.