ETV Bharat / state

’1028 வாக்குப்பதிவு மையங்களில் வெப் கேமரா கண்காணிப்பு’: ஆட்சியர் மெகராஜ்

author img

By

Published : Apr 5, 2021, 7:47 PM IST

நாமக்கல்: 1028 வாக்குப்பதிவு மையங்கள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் மெகராஜ்
ஆட்சியர் மெகராஜ்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் இன்று (ஏப்.6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் உள்ள 691 வாக்குப்பதிவு மையங்களில் 2,049 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 215 வாக்கு சாவடி மையங்கள் பதற்றமான வாக்கு சாவடி மையங்களாக கண்டறியப்பட்டு, அவற்றிற்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1028 வாக்கு பதிவு மையங்கள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்ல 138 நுண் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 453 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 1.52 கோடி ரூபாய் பணமும், 73 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5900 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் வாக்கு செலுத்த வரும் பொதுமக்கள் அனைவரும் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பேட்டி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வசதியாக ஒவ்வொரு வாக்கு சாவடி மையங்களுக்கும் 20 பிபி கிட் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா நோயாளிகள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முட்டிந்தவுடன் 6 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்படும்’ என்றார்.

இதையும் படிங்க: சென்னை சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.