மயிலாடுதுறை: தருமபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில், அடையாளம் தெரியாத சிலர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர், ஆயுதங்களுடன் இருந்த 16 பேரை சுற்றி வளைத்தனர்.
காவலர்களை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிய 16 பேரில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மயிலாடுதுறையில் கடந்த ஆகஸ்ட் 17 -ஆம் தேதி இரவு முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தவர்களை பழி வாங்குவதற்காக அவரது ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பட்டுக்ககோட்டை வெட்டிகாடுவை சேர்ந்த மன்னாரு என்கிற அருண்சந்தர் (32), வைத்தீஸ்வரன்கோயிலை சேர்ந்த ராகுல் (23), மயிலாடுதுறை குமரக்கட்டளைத் தெருவைச் சேர்ந்த சத்யநாதன் (19), தருமபுரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (21), கீழநாஞ்சில்நாட்டை சேர்ந்த அபினாஷ் (22), ஆகியோர் மீது ஆயுத தடுப்புச் சட்டம் ் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தப்பி ஓடிய சந்திரமோகன், ரஞ்சித், கட்டபொம்மன், அருண்பாண்டியன், மணி, அன்பரசன், சதீஷ், மணிகண்டன், புதுக்கோட்டையைச் சேர்ந்த கபிலன், பாண்டியன், மணிகண்டன் ஆகிய 11 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் அருகே சோகம்: தாயும் குழந்தையும் உயிரிழப்பு