ETV Bharat / state

மாட்டிறைச்சி சூப் அருந்தி முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு கத்திக்குத்து! - இளைஞர்

நாகை: மாட்டிறைச்சி சூப் அருந்தி அதனை முகநூலில் பதிவிட்ட இளைஞரை கத்தியால் குத்திவிட்டு  தப்பியோடிய இந்து மக்கள் கட்சியினரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

இளைஞருக்கு கத்திக்குத்து
author img

By

Published : Jul 12, 2019, 12:18 PM IST

நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது பைசான். இவர், நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாட்டிறைச்சி சூப் அருந்தியுள்ளார். இந்நிலையில், மாட்டிறைச்சி சூப் அருந்திய தனது புகைப்படத்தை, "என்னதான் சொல்லும்... மாட்டுக்கறி மாட்டுக்கறி தான்யா" என்ற வாசகத்துடன் நேற்று (வியாழக்கிழமை) முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த தினேஷ் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட கும்பல் முஹம்மது பைசான் வீட்டிற்குள் நுழைந்து கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த முஹம்மது பைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் முஹம்மது பைசான் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கும்பலை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இளைஞருக்கு கத்திக்குத்து

வட மாநிலத்தை போல நாகை அருகே மாட்டிறைச்சி சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:நாகை அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட வாலிபருக்கு கத்திக்குத்து ; தாக்குதல் நடத்தி தப்பியோடிய இந்து மக்கள் கட்சியினருக்கு போலீசார் வலை வீச்சு ;
Body:நாகை அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட வாலிபருக்கு கத்திக்குத்து ; தாக்குதல் நடத்தி தப்பியோடிய இந்து மக்கள் கட்சியினருக்கு போலீசார் வலை வீச்சு ;

நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது பைசான். இவர் நேற்றையதினம் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்ட தனது புகைப்படத்தை, என்னதான் சொல்லு மாட்டுக்கறி மாட்டுக்கறி தான்யா என்ற வாசகத்துடன் இன்று மதியம் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த தினேஷ் தலைமையிலான 20 க்கும் மேற்பட்ட கும்பல் முஹம்மது பைசான் வீட்டிற்குள் நுழைந்து கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் கை மற்றும் தோல் பகுதிகளில் கத்தி குத்து வாங்கி படுகாயமடைந்த முஹம்மதுபைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முஹம்மதுபைசான் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். வட மாநிலத்தை போல நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.