மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத் (31). அவர் இன்று (டிச. 04) அதிகாலை, வீட்டின் அருகில் உள்ள சாலையில் நடத்துசென்றார். அப்போது, சாலையில் அறுந்து கிடந்துள்ள மின்கம்பியை மிதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த ஊர் மக்கள், கொள்ளிடம் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த காவலர்கள், அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அத்துடன் மின்சார அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மின்கம்பி அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக நேற்று முழுவதும் மயிலாடுதுறையில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு சிற்றுந்து மோதிய விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு!