நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே காக்கழனி கிராமத்தில் உள்ள காலனி தெருவைச் சேர்ந்த முருகராஜுக்குச் சொந்தமான நிலத்தை அளந்துகொடுக்க வேண்டும் என்று கீழ்வேளூர் வட்டாசியர் கார்த்திகேயனிடம் மனு கொடுக்கப்பபட்டது.
இது தொடர்பாக வட்டாட்சியர் கார்த்திகேயன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் அக்பர் நிஷா, நில அளவையாளர் மல்லிகா உள்ளிட்டோர் நிலத்தை அளப்பதற்காகச் சென்றுள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களைத் தகாத சொற்களால் பேசி அரசுப் பணியை செய்யாவிடாமல் தடுத்துள்ளார். இதனால் நிலத்தை அளக்காமல் அலுவலர்கள் திரும்பி வந்துள்ளனர்.
இது குறித்து வட்டாட்சியர் கார்த்திகேயன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அரசுர் பணியை செய்யாவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து லெனினைக் கைதுசெய்தனர்.
பின்னர் அவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.