ETV Bharat / state

ஊரடங்கை மீறி கிரிக்கெட் பந்தையம்; 16 வாகனங்கள், கிரிக்கெட் மட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறை! - Cricketers on the curb

மயிலாடுதுறை: ஊரடங்கு விதிகளை மீறி கிரிக்கெட் பந்தயம் நடத்திய 16 இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

author img

By

Published : May 29, 2021, 4:59 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமம் சொக்காயி அம்மன் கோயில் திடலில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் பந்தயம் நடத்துவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தகவலறிந்தததும் துணை ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது காவல் துறையினரைக் கண்டதும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 16 இளைஞர்கள் கிரிக்கெட் மட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பியோடினர். அவர்களை காவல்துறையினர் விரட்டிப்பிடித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர்களிடமிருந்து 16 இருசக்கர வாகனங்கள், கிரிக்கெட் விளையாட பயன்படுத்திய 7 கிரிக்கெட் மட்டைகள், ஸ்டம்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதில் பெரும்பாலான இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள். எனவே அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு காவல்துறையினர், அவர்களிடம் "இனிமேல் இப்படி நடக்க மாட்டோம்" என்று எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் ஊரடங்கு விதி மீறலில் ஈடுபட்டதாக சுமார் 1,067 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 932 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் பழைய முறையிலேயே மறுதேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.