மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா வெள்ளக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரஜினிசெல்வம் - சற்குணா. இத்தம்பதி தங்கள் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது கைப்பையில் ஒரு லட்சம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை உடன் எடுத்துச் சென்றுள்ளனர். குழந்தையையும், கைப்பையையும் வைத்திருந்த சற்குணா, வழியில் கைப்பையைத் தவறவிட்டுள்ளார்.
கைப்பையை ஒப்படைத்த இளைஞர்
சிறிது தூரம் சென்ற பிறகே சற்குணா தன் கையில் கைப்பை இல்லை என்பதை அறிந்துகொண்டுள்ளார். மீண்டும் அதே சாலையில் தேடியும் கைப்பையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, அவர்கள் தவறவிட்ட கைப்பையை கண்டெடுத்த தரங்கம்பாடியைச் சேர்ந்த இளைஞர் கிருஷ்ணன், காவல் துறையினர் முன்னிலையில் தம்பதியிடம் கைப்பையை ஒப்படைத்தார்.
தவறவிட்ட கைப்பையை ஒரு மணி நேரத்தில் கண்டெடுத்து வழங்கிய இளைஞரின் மனிநேய செயலுக்கு ரஜினிசெல்வம்- சற்குணா தம்பதியினர் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'மணமக்களுக்கு மண் அடுப்பு; அரசுக்குப் பாடம் எடுப்பு' - நண்பர்கள் தந்த பரிசும் பாடமும் அடடே!