மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி வட்டம் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணும், அரசூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த ராஜி மகன் வெங்கடேசன்(28) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து கணவன் மனைவிபோல் வாழ்ந்துள்ளனர்.
அதன் விளைவாக பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து, திருமணம் செய்துகொள்ள வெங்கடேசனிடம் அப்பெண் கேட்டுள்ளார். அவர் மாதங்களைக் கடத்தியதால் கர்ப்பமாகியுள்ளது வீட்டிற்குத் தெரிந்தது. இதையறிந்து வெங்கடேசன் பழகுவதை நிறுத்திக்கொண்டு தலைமறைவானார். தொடர்ந்து வெங்கடேசனைக் கண்டுபிடித்து திருமணம் செய்துகொள்ள கேட்டபோது திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுத்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வெங்கடேசனை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்.
இதையடுத்து நம்ப வைத்து ஏமாற்றுதல், திருமண ஆசை வார்த்தைகூறி கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியது உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: