நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் 17 வயதான மாற்றுத்திறனாளி சிறுமிக்கு, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த ஜெயசூர்யா(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளைடைவில் அது காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் தனது தாயார் அடிக்கடி திட்டி தொல்லை கொடுக்கிறார் என்றும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் சிறுமி கூறியுள்ளார். ஜெயசூர்யாவும் கடந்த அக்.19ஆம் தேதியன்று சிறுமியை அழைத்துச் சென்று மேலமருத்துவக்குடி பகுதியில் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இதனையறிந்த சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜெயசூர்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தனது தாயார் திட்டியதால்தான் நான் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன் நான் ஜெயசூர்யாவுடன்தான் வாழ்வேன் இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி சிறுமி தனது தாயாருடன் வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டார். இதனால் சிறுமியை காவலர்கள் பெண்கள் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.