நாகை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், பெரம்பூர், பாலையூர் மற்றும் பாடசாலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவல்துறையினருக்கு, கரோனா தொற்று ஒழிப்புப் பாதுகாப்பு பணியின்போது ஏற்படும் மனஅழுத்தத்தை போக்குவதற்கான யோகா பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை முன்னிலையில் யோகா, தியான பயிற்சி இன்று காலை நடைபெற்றது. இதில், சித்தாசனம், தடாசனம், பவன முகத்சனம், பர்வதாசனம், மகா முத்ராசனம், தனுராசனம், சலபாசனம், யோக முத்திரை பயிற்சி உள்ளிட்ட யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். பதஞ்சலி யோகா மைய நிறுவனர் கணேசன் காவலர்களுக்கான யோகா பயிற்சியை அளித்தார்.