நாகை மாவட்டம், சீர்காழி தனியார் பள்ளியில் பத்து வகையான ஆயுதங்களை கொண்டு சிலம்பம் சுற்றும் விழா நடைபெற்றது. தொடர்ந்து 8.30 மணி நேரம், 300 மாணவர்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்தும் சிலம்பம் சுற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் சிலம்பாட்டம் மட்டுமின்றி மான்கொம்பு, சுருள்வாள் வீச்சு, கரலாகட்டை சுத்துதல், கத்திவீச்சு, ஈட்டிவீச்சு உள்ளிட்ட 10 வகையான பாரம்பரிய ஆயுதங்களை கொண்டு வீர விளையாட்டுகள் நடைபெற்றன.