ETV Bharat / state

உலக கைம்பெண்கள் தினம்: வாழ்வுரிமை சங்கம் சார்பில் பூச்சூடி, நெற்றியில் திலகமிட்டு விழிப்புணர்வு! - World Handmaids Day

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு, கைம்பெண்கள் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் தன்னார்வமாக முன்வந்து தலையில் பூச்சூடி, நெற்றியில் திலகமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

world-handmaids-day-widow-womens-right-to-life-association-at-mayiladuthurai
உலக கைம்பெண்கள் தினம் :மயிலாடுதுறையில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் மாநாடு.
author img

By

Published : Jun 27, 2023, 9:45 PM IST

உலக கைம்பெண்கள் தினம் :மயிலாடுதுறையில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் மாநாடு.

மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு, கைம்பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் "வலிகளை வலிமைகளாக மாற்றுவோம்" என்ற தலைப்பில் கைம்பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் , பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்பாகவே பூவையும் பொட்டினையும் அணிகின்றனர்.

திருமணம் ஆனதற்குப் பிறகு அவர்கள் புதிதாக அணிந்து கொள்வது தாலியும், மெட்டியும் மட்டுமே. எனவே திருமணம் ஆனதற்கு பிறகு கணவர் உயிரிழந்துவிட்டால், பெண்கள் திருமணத்திற்கு முன்பு இருந்தே அணிந்து வரும் பூவையும், பொட்டையும் துறக்க தேவையில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக, மாநாட்டு பந்தலில் சபையின் நடுவில் வைக்கப்பட்ட பூ மற்றும் பொட்டினை 500-க்கும் மேற்பட்ட கைப்பெண்கள் பலர் தன்னார்வமாக முன்வந்து தலையில் பூச்சூடி, நெற்றியில் பொட்டு வைத்து சமுதாயத்தில் உள்ள மற்ற கைம்பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க :ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டவர் கொடுத்த புகார்.. நிறுத்தப்பட்ட குடமுழுக்கு... 6 பேர் தற்கொலை முயற்சியின் பகீர் பின்னணி?

இது குறித்து விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் தலைவர் கஸ்தூரி கூறுகையில், "விதவை என்ற வார்த்தையை கைம்பெண் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மாற்றினார். இந்த விழவை நாங்கள் கடந்த 15 வருடங்களாக கொண்டாடி வருகிறோம் கைம்பெண்கள் விழா கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் பூவும் பொட்டும் எங்கள் அப்பா, அம்மா கொடுத்த சொத்தாகும் அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

நாங்கள் கைம்பெண்கள் என்ற பெயரில் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இன்றைக்கு பூவும் பொட்டையும் வைத்து கொள்கிறோம். இதற்கான முக்கிய நோக்கம் சமுதாயத்திதல் உள்ள அனைத்து கைம்பெண்களுக்கும், பூ, பொட்டு வைத்து கொள்ள வேண்டும் அவர்களுடைய சந்ததியினருக்கும் இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களுடைய முக்கிய நோக்கமாகும்" என தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்ட மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைம்பெண்களுக்கு வழங்கப்படும் அரசின் நல திட்டங்களை குறித்து விளக்கி பேசினர். தங்களின் உரிமைகள் மீட்டெடுக்கும் கைம்பெண்களின் இந்த செயல் காண்போரை மெய்சிலிர்க வைத்தது. இதே போல் மூடநம்பிக்கைகள் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டு தங்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாவுள்ளது.

எதிர்பாராமல் கணவன் உயிரிழந்தால், அந்த துக்கத்தில் இருந்தே மீளாத பெண்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் சடங்குகள் இன்றளவும் சமூகத்தில் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. அக்காலத்தில் கணவனை இழந்த பெண் பூ, பொட்டு, மஞ்சள் என மங்கலகரமான பொருட்களை களைந்து, வெள்ளை புடவை உடுத்தப்பட்டு ஒதுக்கியே வைக்கப் பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மறுமணம் மறுக்கப்பட்டதோடு அங்கொன்றும் இங்கொன்றுமாக கைம்பெண்களுக்கு எதிரான மூட நம்பிக்கைகள் தொடரவே செய்கின்றன என்றார்.

இதையும் படிங்க : Gut Health: இந்த உணவு வகைகளை தவறியும் சாப்பிடாதீங்க - குடல் ஆரோக்கியம் அவ்வளவுதான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.